காவல்துறையினரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த காவல்துறையினருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதனைத் தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் காவல்துறையினரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார்.