Home இலங்கைமுன்னாள் புலியும் கைது – 24 மணித்தியாலத்தில் ஐவர் TIDயில்…

முன்னாள் புலியும் கைது – 24 மணித்தியாலத்தில் ஐவர் TIDயில்…

by admin

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நால்வருடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புதுக்குடியிருப்பில் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் விலாசத்தை சேர்ந்த 45 வயதுடைய நடன சபேசன் லோகராசா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மறுவாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டனர் என்று சந்தேகத்தின்
அடிப்பையில் 24 மணித்தியாலத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More