Home பிரதான செய்திகள்மும்பை 13 ஓட்டங்களால் வெற்றி

மும்பை 13 ஓட்டங்களால் வெற்றி

by admin

சென்னை மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியினை வென்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்த தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதனையடுத்து 151 எனும் வெற்றி இலக்குடன் களமறிங்கிய ஹைதராபாத் அணி 19.4 ஓவா்களில் 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் மும்பை அணி 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய மும்பை அணியின் இது 2 ஆவது வெற்றி இது என்பதுடன் 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி அனைத்திலும் தோல்வி கண்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More