Home இலங்கையாழில் 9 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் உட்பட 29 பேருக்கு கொரோனோ

யாழில் 9 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் உட்பட 29 பேருக்கு கொரோனோ

by admin

யாழ்ப்பாணத்தில் 29 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 644 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 36 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 13 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் காவல் நிலைய உத்தியோகத்தர்கள்.

யாழ்ப்பாணம் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவன ஊழியர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தனியார் வங்கி ஊழியர் ஒருவரும் நட்சத்திர விடுதி பணியாளர் ஒருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் கணப்பட்டுள்ளனர்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் காவல்துறை உத்தியோகத்தர். மற்றைய ஒருவர் மின்சார சபை ஊழியர். ஏனைய இருவரும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஐவர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் ஐவரும் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுதலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் ஒருவர் தேசிய சேமிப்பு வங்கி அலுவலகர். மற்றையவர் இலங்கை மின்சார சபை ஊழியர் என அறிக்கையிடப்பட்டுள்ளது ” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More