Home பிரதான செய்திகள்34 ஓட்டங்களால் பஞ்சாப் வெற்றி

34 ஓட்டங்களால் பஞ்சாப் வெற்றி

by admin

இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் 26-வது லீக் போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ஓட்டங்களால் வென்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து, 180 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ஓட்டங்களை மத்திரமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது பஞ்சாப் அணி பெற்ற 3வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More