Home உலகம்இஸ்ரேல் -ஹமாஸ் இயக்கத்துக்கிடையே போர்நிறுத்தம்

இஸ்ரேல் -ஹமாஸ் இயக்கத்துக்கிடையே போர்நிறுத்தம்

by admin

காசா முனையி்ல் தீவிர மோதல் நடைபெற்று வந்தநிலையில் இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.

1967இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய இஸ்ரேல் ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரமாக இருக்கும் என்று அப்போது அறிவித்தது.

இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை என்ற போதிலும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்ததையடுத்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கிடையே மோதல் வலுத்து வருகிறது.

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ள காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இந்த ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது.


இந்நிலையில், இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்தின

மே 10ஆம் திகதி முதல் இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மற்றும் மேற்கு கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் எனவும், இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் எனவும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து காசா பகுதியில் போர் நிறுத்தத்தம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தநிலையில் இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

.இந்த ஒப்பந்தம் இன்று அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவின் போர்நிறுத்த ஒப்பந்த முடிவை இஸ்ரேலிய அமைச்சரவையும் உறுதி செய்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More