Home இலங்கைகொரோனா தொற்றால் உயிரிழந்த விரிவுரையாளரின் சடலம் மின்தகனம் செய்யப்பட்டது

கொரோனா தொற்றால் உயிரிழந்த விரிவுரையாளரின் சடலம் மின்தகனம் செய்யப்பட்டது

by admin

கொரோனா தொற்றுக்கு உள்ளான யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் மின் தகனம் செய்யப்பட்டது. 
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த , யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே உயிரிழந்துள்ளார். 


தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் , விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதியானது. 


அதனை அடுத்து யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். 


விரிவுரையாளரின் சடலம் கொரோனா சுகாதார விதிமுறைகளின் படி கோம்பயன் மணல் மயானத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை  மின் தகனம் செய்யப்பட்டது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More