மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பினை சேர்ந்த லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் கைது செய்யப்பட்ட அவா் இன்று காலை வரை மருதானை காவல்றிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , திடீர் சுகயீனம் காரணமாக இன்று காலை சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவா் , மாளிகாகந்த மேலதிக நீதவானினால் 2 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி மருதானையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் அவா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது