215
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை கரையோதுங்கிய தமி ழக மீனவர்களை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டையை சேர்ந்த 4 மீனவர்களே பைபர் படகில் இன்றைய தினம் கரையொதுங்கினர்
குறித்த மீனவர்கள், “தாம் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடிக்க வலைகளை விரித்து இருந்த வேளை தமது வலைகளை இலங்கை மீனவர்கள் சிலர் அறுத்து எடுத்துச் சென்றனர். அவர்களை துரத்தி வந்த வேளையே தமது படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தாம் வல்வெட்டித்துறை பகுதியில் கரையொதுங்கினோம்” என காவல்துறை விசாரணைகளில் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் 4 மீனவர்களையும் பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் காவல்துறையினர் முற்படுத்திய போதே மீனவர்களை 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
Spread the love