யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு நாளை மறுதினம் 19 ஆம் திகதி வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து நிலவியதால் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில்
இதன்போது யாழ் மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.சொலமன் சிறில் ,இம்மானுவேல் ஆனோலட் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெரிவுக்கு முன்வைக்கப்பட்டதால் கூட்டம் இணக்கமின்றி முடிந்தது.