முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் நாயணச்சுழற்சியி்ல் வென்ற குஜராத் அணி முதலில் களத்தடுப்பினை தொிவு செய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 207 ஓட்டங்களை எடுத்தது. அணித்தலைவா் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்களை எடுத்திருந்தாா்.
இதனையடுத்து, 208 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 64 ஓட்டங்கரள மட்டுமே எடுத்து தோற்றுள்ளது. இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.