நேட்டோ அமைப்பில் பின்லாந்து இன்று(4) 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உட்பட 30 நாட்கள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன.
இதனிடையே, உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தினால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது
இந்நிலையிலேயே நேட்டோ அமைப்பில் பின்லாந்து இன்று இணைந்துள்ளது. நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்துள்ளதால் அந்நாட்டிற்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம். இது ரஸ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும். என்பதனால் நேட்டோ அமைப்பில் பின்லாந்து இன்று இணைந்துள்ளமை உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.