பிரித்தானியாவுக்குள் இலங்கையர்கள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் இலங்கை அரசிடம் உதவி கோரியுள்ளது.
இலங்கைக்கு பயணம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகப் பணிப்பாளர், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆகியோருடன் இடமபெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, அண்மையில் பிரித்தானியா அறிமுகப்படுத்திய புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது முற்றிலும் அவசியமானது என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்தும் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 4 பேர் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டமை குறித்தும் அவர்கள் வினவியுள்ளனர்.