343
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வறட்சியான காலநிலை நிலவி வருகின்ற மையினால் பொதுமக்கள் உட்பட கால் நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சில இடங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் வறட்சி காரணமாக மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்.அதிலும் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள மல்லவராஜன் கட்டையடம்பன்,மாதா கிராமம்,பெரிய முறிப்பு,இரணை இலுப்பகுளம்,கீரிசுட்டான் போன்ற பகுதிகள் அதிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்
குறிப்பாக வறட்சி காரணமாக குறித்த கிராமங்களை சேர்ந்த 952 குடும்பங்களை சேர்ந்த 3244 நபர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல் வழங்கியுள்ளது.இந்த நிலையில் இவ் வறட்சியான காலநிலை தொடரும் பட்சத்தில் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Spread the love