598
மன்னார் உயிலங்குளம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் பிரதான சந்தி பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்பிட்டி பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள இரவு உணவகங்களுக்கு விற்பனைக்கு செய்வதற்காக இவை கொழும்பு -மன்னார் பேரூந்தில் கடத்தி வந்த போது உயிலங்குளம் பகுதியில் குறித்த நபரை மன்னார் மாவட்ட குற்றப் தடுப்பிரிவனா் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் சன்னார் பகுதியை சேர்ந்த 25 வயதான நபர் என்பதுடன் அவரிடம் மன்னார் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருள் மற்றும் சந்தேக நபரை முன்னிலைப்படுத்த உள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து 2900 எண்ணிக்கை உடைய சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் தற்போதைய சந்தை மதிப்பு 5 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love