471
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக, நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில், 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 40 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
ஆதிகபட்சமாக, சங்கானை பிரதேச செயலக பிரிவில் 783 குடும்பங்களைச் சேர்ந்த 2683 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 974 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 310 குடும்பங்களை சேர்ந்த 940 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 712 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 117 குடும்பங்களை சேர்ந்த 439 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
Spread the love