385
யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்டிய பகுதிகளில் கொழும்பில் இருந்து சென்ற, டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகளில் தேர்ச்சிபெற்ற குழுவினர் (பல மாவட்ட மருத்துவர்களையும் உள்ளடக்கிய குழு) நேற்றைய தினம் சனிக்கிழமை (13.01.24) கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதன் போது, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸூம் டெங்கு தொடர்பான கள ஆய்வுப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டு, டெங்கு தொற்று இலகுவாகப் பரவக்கூடிய ஏதுநிலையில் இருக்கும் பகுதிகள் அவதானிக்கப்பட்டு விரைவில் டெங்கைக் கட்டுப்படுத்தக்கூடிய திட்டங்களாக சில உத்தரவுகளை ஆளுநர் பிறப்பித்தார்.
Spread the love