400
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டு இருந்த 12 தமிழக கடற்தொழிலாளர்களை, நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
காங்கேசந்துறை கடற்படையினர் கடலில் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே ,அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்/
Spread the love