சுதந்திர தின நிகழ்வில் அமெரிக்க, இந்திய தூதுவர்கள் பங்குபற்றவில்லை,காரணங்கள் வெளியாகவில்லை.
.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கொழும்பிலுள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூவர்களும் இந்திய தூதுவரும் பங்குபற்றவில்லை. இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது அழைப்பு விடுக்கப்பட்டும் நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.
வெளிநாட்டு தூதுவர்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை என்பதை ஜனாதிபதி செயலக அதிகாரி உறுதிப்படுத்தினார்.
ஆனால் இதற்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொண்டதாகவும் அழைப்பு விடுக்கப்பட்டதா இல்லையா என்று தமக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சின் உரிய பதில் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும் சுதந்திர தின நிகழ்வுக்கு கொழும்பிலுள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள் அழைக்கப்படுகின்றமை மரபாகும். ஆனால் இம்முறை தூதுவர்கள் பங்குபற்றவில்லை.
சுதந்திர தின நிகழ்வுக்கு சீன சார்புடைய தாய்லாந்து பிரதமர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டமையே அமெரிக்க, இந்திய தூதுவர்கள் பங்குபற்றாமைக்கான காரணம் என கொழும்பு உயர் மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.