சீனாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் எந்தவொரு ஆய்வையும் 2024 ஜனவரி 3ஆம் திகதி முதல் ஒரு வருடத்திற்கு மேற்கொள்ள தடை விதித்துள்ளதமைக்கு இலங்கை மீதான தனது அதிருப்தியை சீனா வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ஆராய்ச்சிக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3, தென் இந்தியப் பெருங்கடலில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீன ஆய்வுக் கப்பல் அதிகாரப்பூர்வமாக சீன இயற்கை வள அமைச்சகத்தின் மூன்றாவது கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சொந்தமானது.
அண்டை நாடுகளின் இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படும் பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கை அத்தகைய முடிவை எடுத்துள்ளது. இந்திய ஊடகங்கள் இலங்கையின் இந்த முடிவை சீனாவிற்கு அடி என்று பரவலாகப் பாராட்டின.
எனினும், இந்த முடிவால் எரிச்சலடைந்த சீன அதிகாரிகள், வேறொரு நாட்டின் செல்வாக்கின் பேரில் இத்தகைய முடிவை எடுத்ததற்காக இலங்கை மீது தனது அதிருப்தியை தெரிவித்தனர் .
இந்திய ஊடகங்கள் இலங்கையின் முடிவைப் பாராட்டிய நிலையில், சீன ஊடகங்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க அண்டை நாடுகள் மீது இந்தியா மேலோங்கி இருப்பதாக விமர்சிக்கத் தொடங்கின.