இலங்கையில் உள்ள மாகாண சபை பாடசாலைகள் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (12.03.24) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் மாகாண பாடசாலைகள், தேசியப்பாடசாலைகள் என்ற இருவகையான பாடசாலை முறைமைகள் உள்ளன.
தேசிய பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழும், மாகாணப் பாடசாலைகள் மாகாண சபையின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றமை.
மாகாணசபைகளுக்கான அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில் கல்வியும் முழுமையாக மத்திய அரசின்கீழ் கொண்டுவரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.