தேசபந்து தென்னகோனை காவற்துறை மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியை சாவித்திரி குணசேகரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. பின்னர் மனுவை பரிசீலிக்க ஏப்ரல் 02 ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவற்துறை மா அதிபராக நியமிக்க ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்புச் சபையால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.