Home இலங்கைஇலங்கையில் 24 மணித்தியாலங்களில் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் 24 மணித்தியாலங்களில் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!

by admin

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த 8 விபத்துக்களில் 5 விபத்துக்கள் வீதியில் வாகனம் சறுக்கிச் சென்றதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, சாரதிகளின் கவனக்குறைவால் பல வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து விதிமுறைகளை சாரதிகள உரிய முறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக காவற்துறை  ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவற்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More