Home இலங்கைபிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற  பெண்ணொருவர் மரணம்!

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற  பெண்ணொருவர் மரணம்!

by admin

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற  பெண்ணொருவர் கொரோனோ தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரு நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முதல் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த 12ஆம் திகதி குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More