Home இலங்கை புலம்பெயர் தமிழ் அமைப்புகள், நபர்கள் மீதான தடை – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

புலம்பெயர் தமிழ் அமைப்புகள், நபர்கள் மீதான தடை – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

by admin

புலம்யெர் தமிழ் அமைப்புகள் சில  உள்ளிட்ட  பதினைந்து தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 210 நபர்களின் அனைத்து நிதி, ஏனைய நிதிச் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்கி இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி இதழை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன விசேட வர்த்தமானி இதழை வெளியிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

 

அதற்கு அமைவாக, விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE) , தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamils Rehabilitation Organisation – TRO), உலக தமிழர் இயக்கம் (WTM), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WTRF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) என்பவை முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) , ஜமாதே மிலாதே இப்ராஹீம் ( JMI), விலயாத் அஸ் செய்லானி (WAS) , கனேடியன் தமிழ் தேசிய பேரவை (NCCT) ,தமிழ் இளைஞர் அமைப்பு (TYO) , டருள் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM) , Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட ராமன் சின்னப்பா அல்லது சின்னப்பா மாஸ்டர், கருணா குலரத்னம் அல்லது நல்லதம்பி, துரைசாமி செல்வகுமார் அல்லது ராஜூ, விடுதலைப் புலி உறுப்பினர் வேலுபிள்ளை ரேவதன், ராமசந்திரன் அபிராம் அல்லது நிரோஸன், சண்முகநுசுசுந்தரம் கந்தாஸ்கரன் அல்லது காந்தசேகரன்,கனகராசா ரவிசங்கர் அல்லது சங்கிலி, கிருஷ்ணபிள்ளை சிவஞானம் உள்ளிட்டோருக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More