210
“பொது நிலைப்படும் – பொது வாக்கெடுப்பும்” நிகழ்வு எதிர்வரும் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் மாலை 02.59 மணிக்கு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை யாழில் நடாத்தவுள்ளதாக , நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிவித்து இருந்த நிலையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை பொது வேட்பாளர் விடயத்தை முன்னெடுப்பவர்களில் சிவில் சமூகத்தினர், தாம் இந்நிகழ்வுக்கு செல்ல போவதில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love