184
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பார் தம்பித்துரை ரஜீவ் ஏற்பாட்டில் இந்த தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது. கூட்டத்தில் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடா் ந்து நல்லை ஆதீனத்திற்குச் சென்ற நாமல் ராஜபக்சவை
நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமி சந்தித்த ஷ பொன்னாடை போர்த்து கௌரவித்தார். பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டநிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரால் நாமல் ராஜபக்சவுக்கு நினைவாக நந்திக் கொடி வழங்கப்பட்டது.
அத்துடன் நாமல் யாழ் . ஆயர் இல்லத்தில் யாழ் மறை மாவட்ட ஆயா் ஜஸ்டின் ஞானப்பிரகாச சந்தித்து பலவேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
Spread the love