வழக்கில் முன்னிலையா கத் தவறியதற்காக முன்னாள் ehlhளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெற கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலையாகாமைக்காக ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்திருந்தது.
எனினும் பின்னர் மனுவொன்றை சமர்ப்பித்து நீதிமன்றத்தில் முன்னிலையாகிய ஹிருணிகா தனக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெறுமாறு தனது சட்டத்தரணி மூலம் கோரிக்கை விடுத்ததனையடுத்து நீதிபதி பிடியாணையை திரும்பப் பெற உத்தரவிட்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் காவல்துறைப் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது