125
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகனம் மீது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் , மற்றுமொருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
பருத்தித்துறை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினைகாவல்துறையினர் மறித்த போது , காவல்துறையினரின் கட்டளையை மீறி வாகனத்தை சாரதி தொடர்ந்து செலுத்தி செல்ல முற்பட்ட வேளை காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
அதில் ஒருவர் காயமடைந்த நிலையில் , மற்றையவர் டிப்பர் வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பியோடியுள்ளார். காயமடைந்தவரை காவல்துறையினர் கைது செய்து , காவல்துறை பாதுகாப்புடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை தப்பியோடிய நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும்காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love