களத்தூர் கண்ணம்மா உள்ளிட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் உடல்நல பாதிப்பால் காலமானார். உயிாிழக்கும் போது அவருக்கு வயது 76ஆகும். . இன்று மதியம் அவர் 2 மணி அளவில் உடல்நலக் குறைவால் அவா் உயிரிழந்ததாக அவரது மகன்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிந்து கோஷ். களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு நடனக் குழுவினருடன் நடனமாடினார் பின்னா் சினிமாவில் அறிமுகமான அவர் கோழி கூவுது, கவுரி கல்யாணம், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, மங்கம்மாள் சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
பிந்து கோஷுக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுடன் இதய நோயும் இருந்ததாக சொல்லப்படுகின்றது. மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் சிரமப்பட்டு வந்த பிந்து கோஷிற்கு நடிகர் விஷால், கேபிவை பாலா, நடிகை ஷகீலா உள்ளிட்டோர் பண உதவி செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது