, நீதிமன்ற உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் கலந்துரையாடுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளாா்.
பாதுகாப்பு அதிகாரிமற்றுத் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை அழைத்து, இந்த கோாி்கை விடுக்கப்பட்டுள்ளதாக வும்
எனினும் தடுப்புக்காவலில் உள்ள ஒரு சந்தேக நபருடன் தொலைபேசியில் கலந்துரையாடுவது சட்டவிரோதமானது என்பதால், அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளாா்.
எனினும் னும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு பிள்ளையானை சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் வழக்கறிஞராகச் செயல்படும் உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க விரும்புவதாகக் கூறி கோரிக்கை விடுத்துள்ளதனையடுத்து அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளாா். அதன்படி, உதய கம்மன்பிலவுக்கு சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று பிள்ளையானுடன் கலந்துரையாடியுள்ளாா் எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில்இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளாா்.