224
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு சவால் விடும் வகையில், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் (Vizag) பிரம்மாண்டமான “AI டேட்டா சிட்டி” (AI Data City) அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த மெகா திட்டத்திற்காக இதுவரை சுமார் $175 பில்லியன் (சுமார் ₹14.5 லட்சம் கோடி) மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன! 
விசாகப்பட்டினத்தைச் சுற்றி 100 கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுற்றுச்சூழல் மண்டலமாக (Ecosystem) இது அமையும்.
சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் சர்வதேச ‘கடலடி இணைய கேபிள்களின்’ (Submarine Cables) முக்கிய மையமாக விசாகப்பட்டினம் மாறும்.
அமெரிக்காவிற்கு வெளியே தனது மிகப்பெரிய AI உள்கட்டமைப்பு மையத்தை அமைக்க $15 பில்லியன் முதலீடு செய்கிறது.
இந்தியாவின் கிளவுட் மற்றும் AI உள்கட்டமைப்பை மேம்படுத்த $17.5 பில்லியன் முதலீட்டை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டணி $11 பில்லியன் மதிப்பிலான தரவு மையத்தை (Data Centre) உருவாக்கவுள்ளது.
இந்த தரவு மையங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க, ஆந்திராவின் கொவ்வாடாவில் (Kovvada) 6 அணு மின் நிலையங்களை அமைக்க மத்திய அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த “தரவு நகரம்” வெறும் சர்வர்களை மட்டும் கொண்டிருக்காது; சர்வர் தயாரிப்பு நிறுவனங்கள், குளிர்விக்கும் அமைப்புகள் (Cooling Systems) மற்றும் AI சார்ந்த அனைத்து உள்கட்டமைப்புகளையும் ஒரே இடத்தில் கொண்டு வருவதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்த பாரதம் (Viksit Bharat) நோக்கிய பயணத்தில் இது ஒரு மிக முக்கியமான மைல்கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.! 

________________________________________
Spread the love

