Home உலகம்செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 4 என்பு கூட்டு தொகுதிகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 4 என்பு கூட்டு தொகுதிகள் மீட்பு

by admin

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 4 என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 7ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதன்போது 4 என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் குழந்தை ஒன்றின் என்பு கூட்டு தொகுதி உட்பட 4 என்பு கூட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 250 மனித என்புகூட்டு  தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 247 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சில சான்று பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அவை அகழ்ந்து எடுக்கப்படும் என்றும், அதன் பின்னரே அவை தொடர்பில் தெரிவிக்கப்படும் என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.
#Chemmani #mass grave #Excavation #Humanremains #Skeletalremains #Childremains #Jaffna
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More