Home உலகம்மன்னார் மூர் வீதியில் கொடூரம்-: கணவனைக் கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட மனைவி!

மன்னார் மூர் வீதியில் கொடூரம்-: கணவனைக் கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட மனைவி!

by admin

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை  கொலை செய்து அவரது உடலை  துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில்  குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை (4)  மன்னார்  காவல்துறையினரினால்   மீட்கப்பட்டுள்ளது. குறித்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் ,

மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.பின்னர் சடலத்தை நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார்.  பின்னா் மன்னார்  காவல் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு  சென்ற மன்னார்  காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப் படுத்தியதோடு கொலையை செய்த    பெண்ணையும் அழைத்து வந்தனர்.பின்னர் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்த நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து எடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடையவர்  என்றும் கொலை செய்த அவரது மனைவி மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர்  எனவும் தெரிய வருகிறது.குடும்பத் தகராறு முற்றிய நிலையில் மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்டு   சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உரப்பையில் போட்டு வீட்டின் மலசலகூட குழிக்குள் வீசப்பட்டதாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,கொலை செய்த பெண் மன்னார் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் கடந்த இரண்டு மாதங்களாக மன்னார் மூர்வீதியில் எவ்வித பதிவுகளும் இன்றி வசித்து வந்துள்ளது தெரிய வருகிறது.இந்த நிலையில் குறித்த வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் குறித்த பெண்ணை உரிமை கோரிய அவரின் தந்தையிடம் ஒப்படைக்க பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Mannar #MoorStreet #Murder #Domesticdispute #Familyconflict #Husbandkilled  #Wifearrested  #Dismemberment #Bodydisposal

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More