135
ஈரான், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை நோக்கி பல ட்ரோன் விமானங்களை ஏவியுள்ளதாக அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது. பின்னர் இதை Reuters நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க படைகள் குறைந்தது நான்கு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முக்கியமான எண்ணெய் கடற்பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பாதுகாப்பு அச்சங்களை உருவாக்கியுள்ளதுடன், உலக எரிபொருள் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, அமெரிக்கா ஈரானின் கடலோர ரேடார் தளங்கள்மீதும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், சம்பவம் தொடர்பாக முழுமையான அதிகாரப்பூர்வ விளக்கங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Spread the love

