Home உலகம்சமிந்த விஜேசிறிக்கு 1.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சமிந்த விஜேசிறிக்கு 1.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

by admin

காவற்துறை  அதிகாரிகள் குழுவொன்றைச் சட்டவிரோதமாக வழிமறித்துத் தாக்குதல் நடத்தி, அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு (Chaminda Wijesiri) ஒன்றரை ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதித்துப் பதுளை மேல் நீதிமன்றம் இன்றைய தினம் (2026 ஜூலை 28)  தீர்ப்பளித்துள்ளது.

பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொட்ஸ்கி (Jeyaram Trotsky) முன்னிலையில் இவ்வழக்கின் தண்டனை விபரங்கள் இன்று வாசித்து அறிவிக்கப்பட்டன.

கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி பண்டாரவளை நகரப் பகுதியில் வைத்து, காவற்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சென்ற ஜீப் வண்டியைச் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது குழுவினர் சட்டவிரோதமாக வழிமறித்து, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இவ்வழக்கில் தொடரப்பட்ட 4 பிரதான குற்றச்சாட்டுகளிலும் சமிந்த விஜேசிறி குற்றவாளி என நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டது. குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் (18 மாதங்கள்) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றப் பிடியாணையின் கீழ் சிறையில் அடைக்க உத்தியோகபூர்வமாகக் கட்டளையிடப்பட்டது.

#ChamindaWijesiriSentenced2026  #BadullaHighCourtVerdict #SJB # FormerMPPrisonSentence   #PoliceAssaultCaseBadulla  #SriLankaJudiciaryNews2026

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More