Home உலகம்நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

by admin


நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாராளுமன்ற கட்டிடம் குலுங்கியதன் காரணமாக சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது.

தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்ததாகவும் இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வடக்கு தீவு, தெற்கு தீவு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் எவையும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை என்பதுடன் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வெலிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடமும் குலுங்கியது. இதனால் அவை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் நிலநடுக்கத்தினால் காயமோ, பெரிய அளவில் இழப்புகளோ ஏற்படவில்லை என தகவல் வெளியானதும் அவை மீண்டும் தொடங்கியது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More