Home இலங்கைரணிலுக்கும் வெளிநாட்டு தூது­வர்களுக்கும் இடையில் பேச்­சு­வார்த்தை

ரணிலுக்கும் வெளிநாட்டு தூது­வர்களுக்கும் இடையில் பேச்­சு­வார்த்தை

by admin


ஐக்­கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவுக்கும் வெளிநாட்டு தூது­வர்களுக்கும் இடையில் நேற்­றி­ரவு பேச்­சு­வார்த்தை இடம்பெற்றுள்ளது. அலரி மாளி­கையில் இடம்பெற்ற இச்­சந்­திப்பில் அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் தூது­வர்கள் பங்­கேற்­ற­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த சந்­திப்பில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்­களும் பங்­கேற்­றுள்ளதாகவும் இதன்போது நாட்டின் தற்போதைய அர­சியல் நெருக்­கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்­போது ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடு தொடர்­பிலும் தமது கட்சியின் நிலைப்பாடு குறித்தும் ரணில் விக்கிரமசிங்க தூதுவர்களுக்கு விளக்கி கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்ற அனைத்துக் கட்சிகளுடனான கூட்டத்தின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்pபடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More