Home இலங்கைமக்களின் வாக்குரிமை இல்லாது போவது குறித்து வருத்தம்

மக்களின் வாக்குரிமை இல்லாது போவது குறித்து வருத்தம்

by admin


மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதே சிறந்தது என தேர்தல் ஆணைக்குழுவின்; தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  நேற்றையதினம் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளாகளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதை நடைமுறையில் இல்லாத புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதைவிட பழைய முறைப்படி தேர்தலை நடத்துவதே சிறந்தது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலை நடத்தாதிருப்பது குறித்து தான் வருத்தமடையவில்லை எனவும், மக்களின் வாக்குரிமை இல்லாது போவது குறித்து தான் தனிப்பட்ட ரீதியில் வருத்தமடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More