Home இலங்கைஎம்மை பழிவாங்க மைத்திரியை ஏமாற்றி 19ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது :

எம்மை பழிவாங்க மைத்திரியை ஏமாற்றி 19ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது :

by admin


தன்னையும், தனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தவறான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு அமைவாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அளுபோமுல்ல எஸ்.மஹிந்த வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

என்னையும், எனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதியையும் ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டதாக அவர் கூறினார்.

அதனூடாக பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்குக் காணப்பட்ட உரிமையையும் பறித்துக்கொண்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தவறான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு அமைவாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More