Home பிரதான செய்திகள்ராஜஸ்தானுக்கெதிரான போட்டியில் சென்னை 8 ஓட்டங்களினால் வெற்றி :

ராஜஸ்தானுக்கெதிரான போட்டியில் சென்னை 8 ஓட்டங்களினால் வெற்றி :

by admin

12 ஆவது ஐ.பி.எல்.லின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான 12 ஆவது லீக் போட்டியில் சென்னை அணி 8 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.  நேற்றிரவு தோனி தலைமையலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணிக்கிடையிலுமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 176 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 8 ஓட்டங்களினால்; தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றி மூலம் இத் தொடரில் சென்னை அணி தான் எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More