Home உலகம்ஜாலியன்வாலா பாக் படுகொலை அவமானக் கறை -ஒரு நூற்றாண்டுக்கு பின் வருத்தம் தெரிவித்த பிரித்தானியா

ஜாலியன்வாலா பாக் படுகொலை அவமானக் கறை -ஒரு நூற்றாண்டுக்கு பின் வருத்தம் தெரிவித்த பிரித்தானியா

by admin


பஞ்சாப்பில் நிகழ்ந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக் காலத்து வரலாற்றின் அவமானமான கறை என பிரித்தானிய  பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1919-ம் ஆண்டு இந்தியப் சுதந்திர போராட்டத்தின்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜாலியன்வாலா பாக்கில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்திய போது அப்போதைய பிரித்தானிய ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி்ச்சூடு நடத்தப்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருந்தனர்

அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்த சம்பவம் இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் ஒரு துயரமான நாளாக கருதப்படும் இந்த சம்பவம் இடம்பெற்று இன்னும் 3 நாட்களில் 100 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது.

இந்நிலையில், பிரித்தானிய வாழ் இந்திய பாராளுமன்ற உறுப்பினரான வீரேந்திர சர்மா பிரித்தானிய பாராளுமன்ற மக்கள் சபையில் கடந்த 2017-ம் ஆண்டில் ஒரு தனிநபர் மசோதாவை கொண்டுவந்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தியதுடன் ஜாலியன்வாலா பாக்கில் நடந்த படுகொலைக்கு பிரித்தானிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்தநிலையில் எதிர்வரும் 13-ம் திகதி இந்த கோரப்படுகொலையின் நூற்றாண்டு துக்கநாள் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், இதே பிரச்சனையை மையமாக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் தெரசா மே, ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்தியாவில் பிரித்தானியாவின் ; ஆட்சிக் காலத்து வரலாறின் அவமானகரமானதொரு கறையாகும் என தெரிவித்துள்ளார்.

ஜாலியன்வாலா பாக் சம்பவத்துக்கும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த வேதனைக்கும் தாங்கள் வருந்துகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More