Home இலங்கைஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி

எதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி

by admin

ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு, எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையொப்பமிட்ட ஆவணமொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பியுள்ளனர்.

முன்னதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  #சஜித்பிரேமதாச #ரணில்விக்கிரமசிங்க  #எதிர்க்கட்சித்தலைவர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More