Home உலகம்பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்பு 674 ஆல் அதிகரிப்பு

பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்பு 674 ஆல் அதிகரிப்பு

by admin


பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 674 பேர் இறந்துள்ளனர், இதனையடுத்து உயரிழப்புகள் 26,711 ஆக அதிகரித்துள்ளது. தினசரி இறப்பு அறிக்கையில் மருத்துவமனைகளுக்கு வெளியே இடம்பெற்ற உயிரிழப்புகளின் புள்ளிவிபரம் நேற்று முதல் முறையாக சேர்க்கப்பட்ட பின்னர் இந்த உயர்வு வந்துள்ளது

இந்த அதிகரிப்பின் பின்னர் பிரித்தானியாவின் மொத்த உயிரிழப்புகள் உலகின் மூன்றாவது அதிகபட்ச உத்தியோகபூர்வ எண்ணிக்கையாக அமைந்துள்ளது. தற்போது பிரித்தானியாவில் 171,253 உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றாளர்கள் உள்ளனர்.

உலகளவில், 3.2 மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்கள் காணப்படுவதாகவும் , 227,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் 982,000 பேர் குணமடைந்துள்ளதாகவும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  #பிரித்தானியா  #கொரோனா #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More