பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் த கார்டியன் இணையப் பத்திகையிடம் ஈழம் என்ற உள்ளடக்கத்தை நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி அவ் இணையத்தளத்தில் “Travel quiz: do you know your islands, Man Friday?” என்ற கேள்வி பதில் பக்கத்தில் தெரிவிக்கப்பட்ட பதில் ஒன்று தொடர்பிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது
அந்த இணைய பத்திரிகையின் இரண்டாவது பக்கத்தில் ஈழம் என்று அழைக்கப்படும் தீவின் பெயர் என்ன என கேட்கப்பட்டிருந்த கேள்விக்கான சரியான பதில்களில் ஒன்றாக ´இலங்கை´ என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு ஒருவர் இலங்கையை விடையாக தெரிவித்திருந்த நிலையில் அதுவே சரியான பதிலாகவும் அமைந்திருந்தது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) எனவும் அதில் விபரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கார்டியன் இணையத்தள ஆசிரியருக்கு இது தொடர்பில் அனுப்பியுள்ள கடிதத்தில் ஈழம் என்ற உள்ளடக்கத்தை அகற்றுமாறு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #ஈழம் #கோரிக்கை #கார்டியன்