Home உலகம்அமெரிக்காவில் 500 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்

அமெரிக்காவில் 500 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்

by admin

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் கனமழையால் இரண்டு அணைகளில் உடைப்பு ஏற்பட்டதால், 500 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் மிக்சிகன் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் பாதித்து உள்ளது.  கனமழையால் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்நிலையில் மிட்லேண்ட் பிரதேசத்தில் உள்ள ஈடன்வில் அணை மற்றும் சான்ஃபோர்ட் அணையில் உடைப்பு ஏற்பட்டதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டது.

மேலும் மிட்லேண்ட் பிரதேசத்தில்; அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 42 ஆயிரம் மக்கள் வசிக்கும் மிட்லேண்டு நகரின் அனைத்து பகுதிகளும் தண்ணீரால் சூழப்பட்டுள்ள நிலையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் மூழ்கி உள்ள போதும் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. #அமெரிக்கா #பெருவெள்ளம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More