Home இலங்கைகாவல்துறையினர் மீது வாள் வெட்டு – இருவர் கைது

காவல்துறையினர் மீது வாள் வெட்டு – இருவர் கைது

by admin

 

யாழில்.ஊரடங்கு வேளையில் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்ற காவல்துறையினர்  மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் காவல்துறைஅதிகாரி ஒருவர் கையில் காயமடைந்துள்ளார்.

வலி.வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை இரவு 10 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெறுவதாக காங்கேசன்துறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல் நிலைய உப காவல்துறை பரிசோதகர் தலைமையிலான சென்றிருந்தது. அவர்கள் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது காவல்துறை உப பரிசோதகர் மீது இருவர் தாக்குதலை மேற்கொண்டு வாளினால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர்.
அதனை அடுத்து காயமடைந்த காவல்துறை உத்தியோகஸ்தரை தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற ஏனைய காவல்துறையினர் , சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்திற்கும் அறிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த மேலதிக காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து காவல்துறை அதிகாரி மீது வாள் வெட்டினை மேற்கொண்ட இருவரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர்முன்னெடுத்து வருவதுடன், குழு மோதலில் ஈடுபட்ட ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.  #காவல்துறையினர்  #வாள்வெட்டு #கைது #ஊரடங்கு
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More