Home இலங்கைஅதிகாலை கொள்ளையர்கள் கைது

அதிகாலை கொள்ளையர்கள் கைது

by admin

யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசங்களில் அதிகாலை வேளைகளில் வீதியில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அறுக்கும் பொம்மைவெளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதியில் நேற்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 பெண்களிடம் அறுக்கப்பட்ட சுமார் 6 பவுண் எடையுடைய தங்கச் சங்கிலிகள், கோப்பாய் காவல்துறைபிரிவுக்குட்பட்ட பெண் ஒருவரிடம் அறுக்கப்பட்ட சுமார் 3 பவுண் எடையுடைய ஒரு தங்கச் சங்கிலி மற்றும் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் திருடப்பட்ட ‘ஹங்’ ரக மோட்டார் சைக்கிள் என்பன சந்தேக நபர்களிடம் மீட்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினர்தெரிவித்தனர்.

“யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரும் இணைந்து அதிகாலை 5.30 மணிக்கும் காலை 6.30 மணிக்கும் இடையில் ஆலயங்கள், வேலைக்குச் செல்வதற்காக வீதிகளில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

தற்போது 4 சங்கிலி அறுப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நகைகள் சந்தேக நபர்களிடம் கைப்பற்றப்பட்டுள்ளன. திருடப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள். என காவல்துறையினர்  தெரிவித்தனர்.

அதேவேளை  சகோதரர்களான சந்தேக நபர்கள் இருவரில் மூத்த சகோதரர் கொள்ளை, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றத்துக்கு 4 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து அண்மையில் விடுதலையாகியவர் எனவும் காவல்துறையினர்  தெரிவித்தனர். #அதிகாலை #கொள்ளையர்கள் #கைது #பொம்மைவெளி  #சகோதரர்கள்  #யாழ்ப்பாணம்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More