Home இலங்கைபட்டதாரிகள் நியமனம் – ஜனாதிபதியின் அறிவுறுத்தல்.

பட்டதாரிகள் நியமனம் – ஜனாதிபதியின் அறிவுறுத்தல்.

by admin

தகுதிவாய்ந்த பட்டதாரிகளுக்கு அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 150,000 பேருக்கான தொழில்வாய்ப்பு திட்டம் குறித்து ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் வறுமைக் கோட்டின் கீழுள்ள பொருத்தமானவர்களை இதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், அரச சேவையிலுள்ள பலவீனங்களையும் குறைபாடுகளையும் நிவர்த்திக்கும் வகையில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில், புதிய நியமனங்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More