Home இலங்கைநல்லிணக்கம், மனித உரிமை விவகாரங்களில், தொடர்ந்து முன்னேற வேண்டும்…

நல்லிணக்கம், மனித உரிமை விவகாரங்களில், தொடர்ந்து முன்னேற வேண்டும்…

by admin

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் T. எஸ்பர் (Mark Esper), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த உரையாடலில், நல்லிணக்கம், மனித உரிமை விவகாரங்களில், இலங்கை தொடர்ந்தும் முன்னேற்றத்தை காண வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தபோது அனைத்து நாடுகளின் இறையாண்மையை உறுதிப்படுத்தும், ஒரு சுதந்திரமானதும், வெளிப்படையானதுமமான இந்தோ-பசிபிக் உடன்பாட்டின் மீதான, பகிரப்பட்ட அவர்களின் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் விவாதித்ததாகவும்,

பொதுவான இருதரப்பு பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடிய இருவரும் இராணுவ தொழில்மயமாக்கல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தொலைபேசி உரையாடலின்போது கொரோனாத் தொற்றை வெற்றிகரமாக கையாண்டமை, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றமை குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வாழ்த்துக்களையும் தெரிவித்தாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More